செய்தி

கால்வாயிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

குடும்பஸ்தர் ஒருவர் கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாத்தறை – காலி வீதியில் உள்ள கால்வாயில் இருந்து நேற்று குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அக்குரெஸ்ஸ, பரதுவ திப்பலைவத்த பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என  பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் உள்ள மரமொன்றில் இருந்து குடை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்குரெஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.