செய்தி

பலஸ்தீன அரசை முறையாக அங்கீகரித்த பிரான்ஸ்

பலஸ்தீன அரசை பிரான்ஸ் முறையாக அங்கீகரித்துள்ளது.

இதன்படி இந்த நடவடிக்கையை எடுக்கும் நாடுகளின் வரிசையில் தற்போது பிரான்சும் இணைந்துள்ளது.

நியூயோர்க்கின் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில்; பேசிய ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், “அமைதிக்கான நேரம் வந்துவிட்டது” என்றும், “காசாவில் நடந்து வரும் போரை எதுவும் நியாயப்படுத்தவில்லை” என்றும் கூறியுள்ளார்.

மோதலுக்கு இரு நாடுகள் தீர்வு காண்பதற்கான திட்டங்களை மையமாகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் பிரான்சும் சவூதி அரேபியாவும் ஒரு நாள் உச்சிமாநாட்டை நடத்துகின்றன.

எனினும் இந்த மாநாட்டில் ஜெர்மனி, இத்தாலி மற்றும் அமெரிக்கா என்பன கலந்து கொள்ளவில்லை.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.