செய்தி

தொடருந்தில் மோதி வயோதிபர் ஒருவர் பலி!

பொலனறுவையில் தொடருந்தில் மோதி வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று(19) பொலனறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கத்துருவெல தொடருந்து நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

70 வயது மதிக்கத்தக்க வயோதிபரே உயிரிழந்துள்ளதாக பொலனறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்தில் மோதியே வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

சடலம் பொலனறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலனறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.