செய்தி

அம்பாந்தோட்டையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

அம்பாந்தோட்டையில் திஸ்ஸமஹாராமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சந்துங்கம பிரகதி மாவத்தை பகுதியில் உள்ள கால்வாயிலிருந்து ஆணின் சடலம் நேற்று  (17.09.2025)  மீட்கப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராமை பொலிஸார் தெரிவித்தனர்.

திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் தனிப்பட்ட தகராறு காரணமாக போத்தலினால் தாக்கப்பட்டு தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக 24 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திஸ்ஸமஹாராமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.