செய்தி

யாழ்.பருத்தித்துறை உணவகங்களில் புதிய நடைமுறை

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட உணவகங்களில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் லஞ்சீற் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகரசபையும், பருத்தித்துறை நகர வர்த்தகர்களும் இன்று இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட உணவகங்களில் லஞ்சீற் உட்பட பொலீத்தீன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பாக பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில்  தவிசாளர் தலைமையில் நகர வர்தகர்களுடன் இடம் பெற்ற கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து உணவகங்களில் பொலித்தீன் பயன்படுத்துவதில்லையென்றும், அதற்கு பதிலாக வாழை இலையை பயன்படுத்துவதெனவும், எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து பொலித்தீன் பயன்பாட்டை முற்றுமுழுதாக நிறுத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உணவகங்களில் உணவுப்பொதி செய்வதற்கு ஜனவரி முதலாம் திகதிவரை அனுமதிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.