செய்தி

யாழ் போதனா வைத்தியசாலை; புதிய விடுதி திறப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ விடுதி புதிய கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

போதனா வைத்தியசாலையில் கடந்த ஐந்து வருடங்களாக இலக்கம் 5 மற்றும் இலக்கம் 12 பிரிவுகளில் இயங்கி வந்த குழந்தை மருத்துவ விடுதி தற்போது இல.39 இல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் விடுதிகள் மற்றும் சில விசேட சிகிச்சை பிரிவுகளுக்கான இடப்பற்றாக்குறை காணப்படுகின்றது. மேலும் சில கட்டட தொகுதிகள் அமைக்கப்பட்டு விடுதிகள் திறக்கப்பட வேண்டும்.

அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றது என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.  

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.