செய்தி

போதைபொருளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ. 8 கோடி 50 இலட்சம் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

33 வயதுடைய இந்திய பிரஜையான குறித்த சந்தேகநபர்,  போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 8.54 கிலோகிராம் நிறையுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

தாய்லாந்திலிருந்து பிரவேசித்த சந்தேகநபர், இந்தியாவுக்கு இந்தப் போதைப்பொருளை கடத்த முயன்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.