17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள எட்டு அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை 4 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் 5வது லீக் ஆட்டத்தில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

பங்களாதேஷ் அணி தனது முதல் ஆட்டத்தில் ஹாங்காங்கை வீழ்த்தி இருந்தது. அதே வெற்றியப்பயணத்தை தொடரை பங்களாதேஷ் அணி முயற்சிக்கும்.
இலங்கை அணி தொடரை வெற்றியுடன் தொடங்க கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

