செய்தி

அத்துரலியே ரத்ன தேரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (12) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரத்தன தேரரை தலா 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அபே ஜன பல கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறுவதற்காக; அக்கட்சியின் பொதுச் செயலாளர் வேதனிகம விமலதிஸ்ஸ தேரரை கடத்தி அச்சுறுத்தியதாக ரத்தன தேரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.