செய்தி

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று காலை நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது, வேன் ஒன்றில் பிரவேசித்தவர்கள் வாள்வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை , தனது அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை கலட்டி பகுதியில் வேன் ஒன்றில் வந்த வன்முறை கும்பல் இளைஞன் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

அதனை அடுத்து வீதியில் சென்றவர்கள் காயமடைந்த இளைஞனை மீட்டு , சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

சம்பவத்தில் காயமடைந்த   இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.