செய்தி

வைத்தியர் பாலித ராஜபக்ஷவுக்கு வழக்கு விசாரணை

பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ, ஒழுக்காற்று விசாரணைக்காக அரச சேவை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த காலத்தில் நிலவிய மருந்து பற்றாக்குறை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் வைத்தியர் பாலித ராஜபக்ஷ கூறுகையில், சுகாதார அமைச்சின் அழைப்புக்கு அமைய தாம் அரச சேவை ஆணைக்குழுவுக்கு வந்ததாக தெரிவித்தார்.

15 பேர் உயிரிழப்புக்கு காரணமான எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் அண்மையில் இடம்பெற்ற விபத்தின் போது, விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக வைத்தியர் பாலித ராஜபக்ஷ தமது உயிர் ஆபத்தையும் பொருட்படுத்தாது களத்தில் பணியாற்றி பலருக்கு சிகிச்சை வழங்கியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.