செய்தி

நீரில் மிதந்த இரு சடலங்கள் மீட்பு!

கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவின் ஹெட்டிகம பகுதியில் உள்ள கிம்புல்வா ஓய மண்டலபல பாலம் அருகே மிதந்தவாறு காணப்பட்ட சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இறந்தவர் ஹெட்டிகம, கும்புக்கெட்டே பகுதியைச் சேர்ந்த 80 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த மரணம் நீரில் மூழ்கி இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் சந்தேகத்திற்கிடமான மரணமா? என்பது குறித்து கும்புக்கெட்டே பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

அதேவேளை பல்லேகலே பொலிஸ் பிரிவின் திறந்தவெளி சிறைச்சாலை முகாமுக்கு அருகிலுள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மிதந்தவாறு காணப்பட்ட ஆண் ஒருவரின் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் பார்பர் வத்தை, குன்னேபான பகுதியைச் சேர்ந்த 63 வயதானவர் என தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பல்லேகலே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.