செய்தி

கடத்தப்பட்ட பதின்ம வயது மலையக சிறுமி மீட்பு

சாமி மலை பெயலோன் தோட்ட பாகினி பிரிவில் கடந்த 3 ஆம் திகதி வான் ஒன்றில் கடத்தப்பட்ட 15 வருடம் 8 மாதம் வயதுடைய சிறுமி பேருவளையில் மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் 3ஆம் திகதி காலை 8 மணிக்கு தாய் தந்தையர் தோட்ட பணிக்கு சென்ற வேளையில், குறித்த சிறுமி வெள்ளை நிற வேன் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டதாக சிறுமியின் தந்தை முறைப்பாடளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸாரின் தேடுதலுக்கு அமைய நேற்று பேருவளை பகுதியில் உள்ள 26 வயது உடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இன்று 5 ம் திகதி விசாரணையின் பின்னர் ஹட்டன் நீதி மன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் மீட்கப்பட்ட சிறுமி  டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார். 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.