செய்தி

இலங்கை-இத்தாலி இடையே முதலாவது அரசியல்கூட்டம்

இலங்கை – இத்தாலி இடையிலான முதலாவது அரசியல் ஆலோசனைக் கூட்டம் இன்று(4) கொழும்பில் நடைபெற்றது.

இந்தக் கூட்டம் இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடி மற்றும் இலங்கை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் நடைபெற்றது.

இதில் இலங்கை மற்றும் இத்தாலி இடையே அரசியல் ஆலோசனைப் பொறிமுறையை நிறுவுவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கல்வி, கலாசாரப் பரிமாற்றம், எரிசக்தி மாற்றம், பல்தரப்பு உறவுகள், விமானப் போக்குவரத்து, கடல்சார் ஒத்துழைப்புகள் மற்றும் விவசாயம் ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டன.

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் புதிய அத்தியாயமாக இந்த ஒப்பந்தம் காணப்படுகின்றது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.