செய்தி

போதை மயக்கத்தில் பஸ்ஸை பறக்கவிட்ட சாரதி

பேருவளை நகரத்தில் பேருந்து சாரதிகளுக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை பேருவளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு இன்று (04) முன்னெடுத்திருந்தது.

இதன்போது அளுத்கம – களுத்துறை தனியார் பேருந்தை செலுத்திய சாரதி ஒருவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், அவர் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டார்.

களுத்துறை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் சாரதியை ஆஜர்படுத்திய போது, அவர் கஞ்சா பயன்படுத்தியிருந்தமை உறுதி செய்யப்பட்டது.

அதன்படி, 41 வயதான சந்தேகநபரான சாரதியை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மருத்துவ அறிக்கைகளின்படி, அவர் சிறிது காலமாக கஞ்சாவுக்கு அடிமையாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பேருவளை பொலிஸாரின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.