செய்தி

பிரித்தானியாவில் இலங்கை தம்பதியின் மோசடி

பிரித்தானியாவில் பிரபல எண்ணெய் நிறுவனத்தை நடத்தி வந்த இலங்கை தமிழ் தம்பதி நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை தம்பதி இணைந்து பிரிட்டனில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைத் தொடங்கினர். இதன் மூலம் பில்லியன் கணக்கான பவுண்டுகளைப் பணப் பரிவர்த்தனை செய்து வந்தனர்.

இந்நிலையில் குறித்த நிறுவனம் தற்போது திவாலாகும் நிலைக்கு சென்றுள்ளதாக  கூறப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக, நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி, நிறுவனத்தைக் கைவிட்டு நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இவர்களது நிறுவனம் சுமார் 1.5 பில்லியன் பவுண்டுகள் கடனில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நாட்டை விட்டு தப்பியோடிய இலங்கை தமிழ் தம்பதியை பிரித்தானியப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.  

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.