செய்தி

இந்திய மருத்துவக் கழிவால் இலங்கைக்கு ஆபத்து

இலங்கை கடற்கரையில் அண்மைக் காலமாக இந்தியாவின் மருத்துவக் கழிவுகள் அதிகமாக கரையொதுங்குவதாக united nations climate change Adaptation plane ஆலோசகர் போராசிரியர் W.M. விமலசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இந்தியாவினது தமிழ்நாட்டின் மெட்ராஸ் பகுதியிலேயே அதிகமான வைத்தியசாலைகளின் மருத்துவக் கழிவுகள் கடலில் சூட்சுமமாக விடப்படுகின்றன.

இது நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்படுகிறது. தற்போதைய நிலையில் குறித்த கழிவுகள் அதிகமாக வெளியேற்றப்படுவதால் எமக்கு உணரக் கூடியதாக இருக்கிறது.

கடலில் ஏற்படும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி காற்றால் மன்னார் தொடக்கம் அம்பாந்தோட்டை வரை உள்ள கடற்கரைப் பகுதிகளில் இந்த மருத்துவக் கழிவுகள் கரையொதுங்குகின்றன.

இது தொடர்பில் இலங்கை சூழலியலாளர்களும் பரிசோதனைகளை நடத்தியுள்ளனர். அண்மைக் காலங்களில் ஊடகங்களில் கூட இது தொடர்பான பல செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

குறித்த கழிவுகளில் ஊசிகளும் காணப்படுகின்றன. பல கழிவுகள் கடல் மண்ணில் புதையுண்டு போவதால் வெளியில் தெரிவதில்லை. இவற்றால் ஏற்படும் ஆபத்துக்களை அறுதியிட்டுக் கூற முடியாது. பலவகையான ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடும்.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை (Marine Environment Protection Authority) இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய சமுத்திரத்தை அண்டியுள்ள நாடுகள் சர்வதேச சூழல் பாதுகாப்பு சட்டங்களை கடைப்பிடிப்பதில்லை. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சிவப்பு பட்டியலில் எமது நாட்டின் பெயர் உள்ளது. ஏனெனில், இவ்வாறான செயற்பாடுகளே இதற்கான காரணமாகும்” என அவர் தெரிவித்தார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.