செய்தி

கொழுக்கட்டையால் வாழ்வை இழந்த மாணவி!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சக்தி நகர் இ.பி. சாலையில் வசிப்பவர் முனுசாமி. இவரது 14 வயதான மகள் மோகன பிரியா அரச பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

வெள்ளிக்கிழமை (29) மாலை மோகன பிரியா, தாயாரிடம் கொழுக்கட்டை செய்து தருமாறு கேட்டு அடம் பிடித்துள்ளார்.

அப்போது அவர் நாளைக்கு செய்து தருகிறேன் எனக் கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவி திடீரென வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

உடனடியாக அவரை மீட்டு அரச பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக பெற்றோர் அனுமதித்த போதிலும் குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.