செய்தி

யானை தாக்கியதில் நபரொருவர் மரணம்!

திருகோணமலை- சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்கநகர் பிரதேசத்தில் யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தசம்பவம் நேற்று  (30) காலையில் இடம்பெற்றுள்ளது.

 சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 58வயதுடைய ராசேந்திரன் லிங்கரத்ணம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தன்னுடைய வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது யானை தாக்கியதாக தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.