செய்தி

யாழ். கிட்டுப் பூங்கா அருகில் பேரணி ஏற்பாடு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சர்வதேச நீதி கோரிய பேரணியில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம், ஒகஸ்ட் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ள நிலையில், இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பேரணி, ஒகஸ்ட் 30ஆம் திகதி காலை 10.00 மணியளவில் யாழ். கிட்டுப் பூங்கா முன்பாக நடைபெறும்.

தமிழர்களுக்கு எந்தவித நீதியும் உரிமைகளும் கிடைக்காமையால் சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக நீதியைப் பெற்றுக் கொள்வதற்கும் இனிவரும் காலங்களில் இப்படியான ஆட்கடத்தல் சம்பவங்கள் மீள நிகழாமையை வலியுறுத்தியும் இந்த பேரணி நடத்தப்பட உள்ளது. 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.