செய்தி

டயானாவுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதற்காக பிடியானை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு பிணை வழங்கி கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இன்று 10 மில்லியன் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தை மீறி தவறான தகவல்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டை பெற்றதாகவும், செல்லுபடியாகும் விசா அனுமதி இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்ததாகவும் குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அவருக்கு எதிராக ஏழு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

இது தொடர்பான வழக்கு கடந்த 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்,  பிரதிவாதி நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதால் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.