செய்தி

கனகராயன் குளத்தில் கென்ரர் மோதி ஒருவர் பலி

வவுனியா – கனகராயன்குளம், கொல்லர்புளியங்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த கென்ரர் ரக வாகனம் கொல்லர்புளியங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபருடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த முத்து இராமலிங்கம் என்ற 61வயது குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக கனகராஜன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.