செய்தி

கொழும்பில் விடுதிக்குள் துப்பாக்கி சூடு

கொழும்பின் புறநகர் பகுதியான வெல்லம்பிட்டி, கிட்டம்பகுவ பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

எனினும் துப்பாக்கிச் சூட்டில் எவரும் காயமடையவோ அல்லது கொல்லப்படவோ இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் சம்பவம் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர்.

இன்று அதிகாலையில் மோட்டர் சைக்கிளிலில் வந்த 3 சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபர்களின் கையடக்க தொலைபேசி மற்றும் துப்பாக்கியின் தோட்டாக்கள் சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து வெல்லம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.