செய்தி

அரசாங்கம் நாணய அச்சிடலில் ஈடுபடவில்லை

அரசாங்கம் எந்தவொரு நாணய அச்சிடலிலும் ஈடுபடவில்லை என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (19) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு பிரதி அமைச்சர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 1.2 ட்ரில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டுள்ளதாக அமைப்பு ஒன்று தெரிவித்த அறிக்கை வேண்டுமென்றே அல்லது அறியாமையால் வெளியிடப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்திற்கு நாணயத்தை அச்சிட முடியாதென்றும், அதற்கு சட்டப்பூர்வ அடிப்படை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை மத்திய வங்கியால் நிர்வகிக்கப்படும் கையிருப்பினால் நாணய விரிவாக்கம் நிகழ்ந்துள்ளதாகவும், அது அரசாங்கத்தின் நாணயத்தாள் அச்சிடல் அல்ல என்பதுடன், இது சமூகத்தை முற்றிலும் தவறாக வழிநடத்துவதாக அமைந்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த குறிப்பிட்டுள்ளார்

மேலும் தற்போது நாட்டில் 1.6 ட்ரில்லியன் நாணய இருப்பு உள்ளதுடன், பரந்த பண விநியோகம் 15 ட்ரில்லியனை நெருங்கியுள்ளது.

எனவே இந்த பரந்த பண விநியோகத்தின் வளர்ச்சியானது மத்திய வங்கியின் தலையீட்டால் ஏற்பட்ட ஒன்று எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.