செய்தி

சீனாவிடமிருந்து கடனுதவி பெற அரசு தீர்மானம்

சீனாவிடம் இருந்து ஐந்நூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் உதவியை பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளார்.

கண்டி அதிவேகப் பாதையின் எஞ்சிய நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்காக குறித்த கடனுதவியைப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கண்டி அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகள் கடந்த காலத்தில் தடைப்பட்டிருந்தமைக்கு அன்றைய ஜே.வி.பி. உள்ளிட்டவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமே காரணமாக அமைந்திருந்தது.

இந்தநிலையில், அதிகாரத்துக்கு வந்த பின்னர் ஜே.வி.பி. தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அதிவேகப்பாதை நிரமாணப் பணிகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் அதற்காக முன்னர் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த சீன நிறுவனத்திடமே அதற்கான நிர்மாணப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்காகவே சீனாவின் எக்சிம் வங்கியில் இருந்து ஐந்நூறு மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாகப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.