சினிமா

தனுஷின் தங்கையாக நடிப்பவர் யார் தெரியுமா?

நடிகர் தனுஷ் இயக்கி நடித்து அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் “இட்லி கடை”. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும்,ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் என மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒக்டோபர் முதலாம் திகதி இப்படம் வெளிவரவுள்ளது.

“இட்லி கடை” திரைப்படத்தில் தனுஷுக்கு தங்கையாக 31 வயதான ஷாலினி பாண்டே நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஷாலினி பாண்டே தெலுங்கில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

சினிமா

வசூலில் சாதனை படைக்கும் ‘குட் பேட் அக்லி’

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் முதல் நாள் வசூல் மட்டுமே தமிழ்நாட்டில் ரூ. 30.9 கோடி என அறிவிக்கப்பட்டது.அஜித்தின்
சினிமா

‘காணாமல் போனதற்கு காரணம் இதுதான்…’நஸ்ரியா

நடிகை நஸ்ரியா சமீப நாட்களாக பொது வெளிக்கு வரவில்லை. இதற்கான காணரம் பற்றி கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.கேரள திரைப்பட