செய்தி

இலங்கையில் கஞ்சா பயிர் செய்கைக்கு அனுமதி

இலங்கையில் கஞ்சா பயிர் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதலீட்டு சபையின் அனுமதியில் அந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு ஏழு வெளிநாட்டு முலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களத்தின் முன்னாள் அத்தியட்சகர் வைத்தியர் தம்மிக்க அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“முதலீட்டு சபையின் திட்டத்தின் படி வெளிநாட்டினருக்கும் மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது”. 37 வெளிநாட்டு முதலீட்டாளர் விண்ணப்பித்திருந்த நிலையில் ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தற்காலிகமாக ஆறு மாதம் அனுமதிப்பத்திரமே வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதலீட்டாளர்கள் 02 மில்லியன் டொலர் வைப்பு தொகையும் செலுத்த வேண்டும்.

பயிர் செய்கை செய்யப்படும் நிலம் முழுதும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு அதிக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

வெளியாருக்கு பயிர்ச் செய்கையை பார்வையிடும் சந்தர்ப்பம் மற்றும் தெரியக் கூடிய தன்மை இருக்க கூடாது. இதற்காக முதலீட்டு சபைக்கு சொந்தமான மீரிகமவில் உள்ள 64 ஏக்கர் காணியும் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்படும் கஞ்சாவில் எண்ணெய் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. அத்தோடு மருத்துவ பயன்பாட்டுக்காவும் ஏற்றுமதி செய்யப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணிலின் ஆட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த டயனா கமகேவும் கஞ்சா பயிர்ச் செய்கை தொடர்பில் திட்டம் தீட்டப்பட்ட நிலையில் பெரும் சர்ச்சைக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.