செய்தி

திருகோணமலையில் கைக்குண்டால் பெரும் பரபரப்பு

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன குளம் பகுதியில் நேற்று மாலை கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராணுவப் புலனாய்வுப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், குறித்த சின்ன குளம் பகுதியின் கரையோரத்தில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போதே குறித்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட கைக்குண்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கந்தளாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.