செய்தி

நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன்  உயிரிழப்பு

ஹோட்டலொன்றிலுள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி 12 வயது சிறுவன் வெள்ளிக்கிழமை (08) மாலை உயிரிழந்துள்ளார். ஓபநாயக்கவில் அமைந்துள்ள ஹோட்டலில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த சிறுவன் இம்புல்தென்னவைச் சேர்ந்தவரென்றும் பெற்றோருடன் ஹோட்டலுக்கு சென்று, நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.