செய்தி

மருத்துவ ஆட்சேர்ப்பில் தொழிற்சங்க தலையீடு

பயிற்சிக்குப் பின்னர் மருத்துவ அதிகாரிகளின் ஆட்சேர்ப்பு செயற்பாட்டில் தலையிட தொழிற்சங்கங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பயிற்சிக்குப் பிந்திய நியமனங்கள் என்று அழைக்கப்படும் மருத்துவ சேவையின் முதன்மை நிலைக்கு 1,402 மருத்துவ அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது இணையத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், ஆட்சேர்ப்பு ஆவணத்திற்கு அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஆட்சேபனை ஆதாரமற்றது என்று விஜயமுனி வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, சட்ட நடைமுறைகளை மீறி பயிற்சிக்குப் பிந்திய நியமனப் பட்டியலை அமைச்சகம் தயாரித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகளின் பேச்சாளர் சமில் விஜேசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த விடயத்தில் திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணிக்குத் திட்டமிட்ட அடிப்படையில் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும்.

என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகளின் பேச்சாளர் சமில் விஜேசிங்க எச்சரித்துள்ளார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.