செய்தி

இலங்கையில் பரீட்சைக்காக தயாரான மாணவி பலி

காலி, எல்பிட்டிய பிரதேசத்தில் புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்நோக்க காத்திருந்த 5ஆம் வகுப்பு மாணவி ஒருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அமுகொட சுதாரக ஆரம்ப பாடசாலையில் 5ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்த நெதுலி மதுஷிகா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

பரீட்சைக்கு முன்னரான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்த சிறுமி, தனது தந்தையின் முச்சக்கர வண்டியில் பாட்டி மற்றும் அத்தையுடன் அம்பலங்கொடவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து மீண்டும் எல்பிட்டியவுக்கு திரும்பிய போது விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எல்பிட்டிய – பிட்டிகல வீதியில் முச்சக்கர வண்டியில் இருந்து தவறி விழுந்த நெதுலி, பலத்த காயங்களுக்கு உள்ளானார்.

உடனடியாக எல்பிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், சிறுமி உயிரிழந்தார்.

8 மாதங்களுக்கு முன்னர் சிறுமியின் தாயார் வெளிநாடு சென்றிருந்தார். இந்த நிலையில் பாட்டியின் பராமரிப்பில் சிறுமி வசித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.