பதினெட்டு வயதான யெவன் டேவிட், FIA ஃபோர்முலா 3 செம்பியன்சிப்பில் பங்கேற்கும் முதல் இலங்கை ஓட்டுநர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
இலங்கையின் மோட்டார்ஸ்போர்ட் வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையாக, 2026 சீசனுக்காக AIX ரேசிங் உடன்படிக்கையில் டேவிட் கையெழுத்திட்டுள்ளார்.
இதன்படி, இந்த இளம் ஓட்டுநர் தற்போது யூரோஃபார்முலா பட்டத்திற்கான போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

ஏற்கனவே அவர் மோட்டோபார்க் அணிக்காக இந்த பருவத்தில் பல வெற்றிகளை பெற்றுள்ளார்.
இந்தநிலையில், யூரோஃபோர்முலாவில் நுழைவதற்கு முன்னர், டேவிட் 2024 இல் யூரோகப்-3, ஸ்பானிஷ் F4 மற்றும் UAE F4 செம்பியன்சிப்களில் போட்டியிட்டார்.

