செய்தி

இணுவில் தியேட்டர் அருகில் 2 கஞ்சாவுடன் கைது

யாழ்ப்பாணம் –இணுவில் தியேட்டர் அருகில்  நேற்றிரவு, கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலணி மற்றும் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த இருவரே கைதாகியுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அவர்களிடமிருந்து 9 கிலோ 794 கிராம் எடையுடைய கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டன. கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவரும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டனர்.

விசாரணைகளின் பின்னர் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.