செய்தி

முதலிரவில் புதுமணப்பெண் தற்கொலை

இந்தியா – ஆந்திராவில் முதலிரவில் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகையில்,ஆந்திர மாநிலம் சேர்ந்த  ஹர்ஷிதா (வயது 22). என்பவருக்கும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நாகேந்திரா என்பவருக்கும் நேற்று முன்தினம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

திருமணத்தின் பின்னர் சோமந்தூர் பள்ளியில் உள்ள மணமகள் வீட்டில் வைத்து புதுமணத்தம்பதியின் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்கிடையே வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்ற புதுமணப்பெண் கதவை  பூட்டி நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், கதவை தட்டிப்பார்த்தனர்.

கதவை பெண் திறக்காததை அடுத்து கதவை உடைத்து  உறவினர்கள் உள்ளே சென்றனர். அங்கு மின்விசிறியில் தூக்கில் தொங்கிய மணமகளை கண்டு உறவினர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றபோதும் யுவதி உயிரிழந்ததாக  கூறப்படுகின்றது

இந்நிலையில் புது மணபெண்ணின் தற்கொலைக்காக காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், இச்சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.