செய்தி

இலங்கையில் கடும் வெப்பம்! வானிலை எச்சரிக்கை

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம்,வெப்பம் மிக்க வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களிலும், வெப்பக் குறியீடு – மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை – ‘எச்சரிக்கை நிலைக்கு’ அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலையின் கீழ், நீண்ட நேரம் வெளிப்புறங்களில் வேளைகளில் ஈடுபட்டால் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.அதே நேரத்தில் வெப்பப் பிடிப்புகளுக்கு வழிவகுக்கும்.

எனவே, முடிந்தவரை அடிக்கடி நிழலை நாடுமாறும், கடுமையான வெளிப்புற செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.