செய்தி

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு ஆழியவளைகளப்பு பகுதியில் பெருந் தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஆழியவளை மற்றும் கட்டைக்காட்டு பகுதி முழுவதும் கடற்படையினரால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது ஆழியவளை களப்பு பகுதியில் 102.350 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா அடங்கிய 30 பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.