செய்தி

அறுகம் குடா பகுதியில் குவியும் இஸ்ரேலியர்கள்

சுற்றுலா விசாவில் வரும் இஸ்ரேலிய பிரஜைகள், அறுகம் குடா பகுதியில் சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக உள்ளூர் வணிக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்து வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பல வெளிநாட்டினர் மீது ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுற்றுலாத் துறையில் அறுகம் குடா முன்னணி இடங்களில் ஒன்றாகும். அறுகம் குடா கடற்கரை பகுதி நீர்சறுக்கலுக்கு ஏற்றதாக இருக்கின்றமை இதற்கு முதன்மையான காரணமாகும்.

இதற்கிடையே, தற்போது இந்தப் பகுதிக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இஸ்ரேலிய பிரஜைகள் என்று அந்தப் பகுதியில் உள்ள உள்ளூர் வணிக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

சுற்றுலா சேவைகள் பல இஸ்ரேலிய பிரஜைகளால் வழங்கப்படுவதே இதற்கு முக்கிய காரணமாகும்.

சமீபத்திய விசாரணையில், சுற்றுலா விசாவில் வரும் இஸ்ரேலிய பிரஜைகள் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.

இதன் விளைவாக, உள்ளூர் வணிக உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, அறுகம் குடா பகுதியில் வசிப்பவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.