செய்தி

நாமலை சந்திக்கவுள்ள 25 பேர் கொண்ட குழு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் குழு, கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் கலந்துரையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது நாளையதினம் இடம்பெறவுள்ளது.

மொட்டுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 25 பேர் கொண்ட குழு இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு பொதுவான உடன்பாட்டை எட்டுவது குறித்து இருவரும் இணைந்து விவாதிக்கவுள்ளதாக கட்சி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு உடன்பாட்டை எட்டிய பிறகு, கட்சியுடன் இருக்கும் அனைத்து இடதுசாரி அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களையும், பின்னர் பிற அரசியல் கட்சிகள் மற்றும் பிற எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பரந்த இடதுசாரி சக்தியைக் கட்டியெழுப்புவதற்கான விவாதங்கள் தொடங்கும் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.