செய்தி

இரவில் யுவதியின் மோசமான செயல்

தங்கச் சங்கிலி ஒன்றை திருட முயன்ற 26 வயதுடைய யுவதி ஒருவர், ஹட்டன் நகரில் உள்ள நகை கடையில் வைத்து சமயோசிதமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு, ஹட்டன் இரண்டாம் பிரதான வீதியில் அமைந்துள்ள நகை கடையில், கணக்கு விவரங்களை பரிசீலித்துக் கொண்டிருந்த உரிமையாளரிடம் ஒரு யுவதி வந்து தங்கச் சங்கிலி ஒன்றைக் காண்பிக்க கேட்டுள்ளார்.

சங்கிலியை காண்பித்து கொண்டிருந்த நிலையில், யுவதி ஒரே நேரத்தில் தனது கைப்பையில் இருந்து வலி நிவாரணி திரவ போத்தலை எடுத்துக் கொண்டு உரிமையாளரின் முகத்தில் வீச முயன்றுள்ளார்.

இந்நிலையில் அதனை தடுத்து, யுவதியின் கைகளைப் பிடித்துக் கொண்டுள்ளார். உடனடியாக வீதியோரத்தினரை உதவிக்கு அழைத்த நகை கடை உரிமையாளர், யுவதியை ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.

யுவதி கைது செய்யப்பட்டதுடன், அவரது கைப்பையில் இருந்து கவரிங் நகைகள் மற்றும் பணத் தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட யுவதி அப்கொட் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், இதற்கு முன் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளதா எனவும் ஹட்டன் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.