செய்தி

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையரின் மோச செயல்

ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் பல சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக இலங்கையர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 37 வயதான தினிர லியனகே என்பரே இந்த குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் திகதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி வரை பல்வேறு பாலியல் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிறுமிகளை சந்தித்தல், பாலியல் தொடர்புகள் மற்றும் பாலியல் தூண்டுதல்களை ஏற்படுத்தியதாக பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

குறித்த இலங்கையர் மீதான வழக்கு அண்மையில் கொலரைன் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது பிணை மனுவிற்காக வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்குமாறு கோரியதை தொடர்ந்து, நீதிபதி வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

லியனகேக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் PSNI பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.