செய்தி

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்

யாழ். மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்றையதினம் மாலை மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் வீதி, கட்டுடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை பின்னால் முச்சக்கர வண்டியில் வந்த மூவர் அவரை கீழே தள்ளி விழுத்தி விட்டு வாள்வெட்டினை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்நிலையில் வீதியில் சென்றவர்கள் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஊரெழு பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு வாள் வெட்டுக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.