செய்தி

பாரதியின் இரண்டாவது சகாவும் கைது

 தொப்பிமனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினரும் இனிய பாரதியின் சகாவுமான  சி.விக்கினேஸ்வரன் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த ஆறாம் திகதி இனிய பாரதி கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காகக் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து அவரின் முன்னாள் சாரதி கடந்த 9 ஆம் திகதி பொத்துவிலில் இருந்து மட்டக்களப்புக்கு தனியார் போக்குவரத்து பேருந்து வண்டியை செலுத்தி சென்ற போது கல்முனை நகரில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த இனிய பாரதியின் மற்றுமொரு சகாவான திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி விக்கினேஸ்வரன் அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.