சினிமா

மறைந்த நடிகை சரோஜா தேவி உடல் நல்லடக்கம்

 தமிழ் திரைப்பட உலகில் 1960 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சரோஜா தேவி (வயது 87) நேற்றையதினம் காலமானார்.

50 ஆண்டு கால திரைப்பட வாழ்க்கையில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் சரோஜா தேவி நடித்துள்ளார்.

திரையுலகில் உலகில் 60 – 70 வரையான காலகட்டங்களில் 17 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்த சரோஜாதேவி, M.G.R, நடிகர் சிவாஜி கணேசன்,ஜெமினி கணேசன் ஆகிய 3 பேருடனும் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர்.

ஒரு காலத்தில் அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைகளை பெற்றவர் நடிகை சரோஜாதேவி.தமிழில் 1958 ஆம் ஆண்டு வெளியான நாடோடி மன்னன் படத்தில் அறிமுகம் ஆனார். 1960-70 ஆம் ஆண்டுகளில் திரையுலகில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி உள்ளிட்ட மொழிகளால் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் உடன் 26 படங்களிலும் சிவாஜி கணேசன் உடன் 22 படங்களிலும் நடித்துள்ளார்.

கடைசியாக நடிகர் சூர்யா நடித்த ஆதவன் படத்தில் சரோஜா தேவி நடித்து இருந்தார்.தமிழ் சினிமா ஜாம்பவான்களுடன் இணைந்து மறக்க முடியாத பல வெற்றிப் படங்களை அளித்த சரோஜா தேவியின் மரணம் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல்களை கூறி வருகின்றனர்.

 கர்நாடக மாநிலம், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள வீட்டில் சரோஜா தேவியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் பெங்களூரு ராம்நகராவில் இன்று செவ்வாய்க்கிழமை (15) நல்லடக்கம் செய்யப்படுகிறது.

You may also like

சினிமா

வசூலில் சாதனை படைக்கும் ‘குட் பேட் அக்லி’

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் முதல் நாள் வசூல் மட்டுமே தமிழ்நாட்டில் ரூ. 30.9 கோடி என அறிவிக்கப்பட்டது.அஜித்தின்
சினிமா

‘காணாமல் போனதற்கு காரணம் இதுதான்…’நஸ்ரியா

நடிகை நஸ்ரியா சமீப நாட்களாக பொது வெளிக்கு வரவில்லை. இதற்கான காணரம் பற்றி கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.கேரள திரைப்பட