வருடப்பிறப்பு
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 14.04.2025 திங்கட்கிழமை அதிகாலை 2.29 மணிக்கு ‘விசுவாவசு’ புதுவருடம் பிறக்கிறது.திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 14.04.2025 திங்கட்கிழமை அதிகாலை 3.21 மணிக்கு ‘விசுவாவசு’புதுவருடம் பிறக்கின்றது.
விஷு புண்ணியகாலம்
13.04.2024 ஞாயிறு இரவு 10.29 மணி முதல் 14.04.2024 திங்கட்கிழமை காலை 6.29 மணி வரை.தலைக்கு – ஆலிலை ,காலுக்கு -இலவமிலை வைத்து மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்யவேண்டும்.
ஆடை நிறம்
சிவப்பு, வௌ்ளை
கை விஷேட நேரம்
திருக்கணித பஞ்சாங்கம்
- 14ஆம் திகதி திங்கட்கிழமை காலை 06.05 முதல் 07.10 மணி வரை
- காலை 09.05 முதல் 09.55 வரை
வாக்கிய பஞ்சாங்கம்
பிற்பகல் 4.06 இல் இருந்து 5 மணி வரை
தோஷ நட்சத்திரங்கள்
திருவாதிரை, சித்திரை, சுவாதி, விசாகம், சதயம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களை கொண்டோர் தவறாமல் மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்யவேண்டும். மேலும், இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் , தான, தர்மம் செய்து, சங்கிரம தோஷ நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.
ஆதாய விடயம்
மேஷம் – 2 வரவு 14 செலவு
இடபம் – 11 வரவு 5 செலவு
மிதுனம் – 14 வரவு 2 செலவு
கடகம் – 14 வரவு 8 செலவு
சிம்மம் – 11 வரவு 11 செலவு
கன்னி – 14 வரவு 2 செலவு
துலாம் – 11 வரவு 5 செலவு
விருச்சிகம் – 2 வரவு 14 செலவு
தனுசு – 5 வரவு 5 செலவு
மகரம் – 8 வரவு 14 செலவு
கும்பம் – 8 வரவு 14 செலவு
மீனம் – 5 வரவு 5 செலவு

