மத்திய கிழக்கு பகுதியில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த பதற்றம் தற்போது மீண்டும் போராக வெடித்துள்ளது. ஈரான் நாட்டின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிப் படைகள் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம், இந்தத் தாக்குதலின் மூலம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது. அதன் படி, சர்வதேச எண்ணெய் வர்த்தகத்திற்கு முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் திறக்க சம்மதித்தது.
ஆனால், கடந்த சில தினங்களாக அந்த வழியாகச் சென்ற சர்வதேச வணிகக் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. கத்தார் மற்றும் சவூதி அரேபியாவிற்குச் சொந்தமான கப்பல்கள் குறிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா இந்த அதிரடித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் சென்ட்காம் (CENTCOM) படைகள் ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள ஈரானின் ராணுவ நிலைகள், ஏவுகணை தளங்கள் மற்றும் கடற்படை தளங்களை நோக்கி 80-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கி அழித்துள்ளன. இந்தத் தாக்குதலில் ஈரானிய ராணுவ வீரர்கள் சிலர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும், “ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடவில்லை, அங்கு கப்பல் போக்குவரத்து வழக்கம் போல் சீராக நடைபெற்று வருகிறது” என்று அமெரிக்க ராணுவம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ஈரான் உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளது. பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

