தகவல்கள் மருத்துவம்

உணவுக் கட்டுப்பாடு இல்லாமலேயே உடல் எடையை குறைக்க முடியும்

How-Does-Weight-Loss

பட்டினி இன்றி பருமன் குறைக்கும் இரகசியம் இதோ!

பலர் உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றினால்தான் உடல் எடை குறையும் என்று நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் கடுமையான உணவுக் கட்டுப்பாடு இல்லாமல்கூட உடல் எடையை குறைக்க முடியும். உடல் எடை குறைய முக்கியமானது நீங்கள் தினமும் பின்பற்றும் வாழ்க்கை முறை தான். சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது, தினசரி உடற்பயிற்சி செய்வது, போதுமான தூக்கம், அதிக தண்ணீர் குடிப்பது போன்ற நல்ல பழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடித்தால் இயற்கையாகவே உடல் எடை குறையத் தொடங்கும்.

நாம் சாப்பிடும் உணவிலிருந்து வரும் சக்தி (கலோரிகள்) நாம் தினசரி செலவழிக்கும் சக்தியை விட அதிகமாக இருந்தால், அந்த கூடுதல் சக்தி உடலில் கொழுப்பாக சேமிக்கப்படும். இதுவே உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாகும்.அதாவது, நாம் சாப்பிடும் உணவின் மூலம் உடலுக்கு வரும் சக்தியை விட, நாம் தினசரி வாழ்க்கையில் செலவழிக்கும் சக்தி குறைவாக இருந்தால், அந்த கூடுதல் கலோரிகள் உடலில் கொழுப்பாக சேமிக்கப்படும். இதுவே உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாகிறது.

மேலும், உடற்பயிற்சி குறைவாக இருப்பது, அதிக எண்ணெய் மற்றும் இனிப்பு உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வது, நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பது, போதிய தூக்கம் இல்லாதது போன்ற பழக்கங்களும் உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

பின்பற்ற வேண்டிய முக்கிய பழக்கங்கள்

1. தினமும் உடற்பயிற்சி

தினமும் குறைந்தது 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.வீட்டிலேயே எளிய உடற்பயிற்சிகள் மற்றும் யோகா போன்ற மென்மையான இதய இயக்கப் பயிற்சிகளையும் செய்யலாம். இவை அனைத்தும் சேர்ந்து உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றன.

2.தண்ணீர் அதிகம் குடிக்கவும்

தினமும் இரண்டு–மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலின் வளர்சிதை மாற்றத்தை(metabolism ) சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.உணவுக்கு முன் ஒரு கப் தண்ணீர் குடித்தால் வயிறு ஒரு அளவு நிறைந்த உணர்வு ஏற்படும்.இதனால் தேவையற்ற சாப்பிடும் பழக்கம் குறைந்து, உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்க உதவுகிறது.

3.நல்ல தூக்கம் (Sleep)

தினமும் குறைந்தது 7–8 மணி நேரம் நல்ல தூக்கம் பெறுவது உடல் எடை குறைக்க மிகவும் முக்கியம். தூக்கம் குறைந்தால் உடலில் ஹார்மோன் சமநிலை கெடுக்கும், அதனால் அதிக பசி உணர்வு ஏற்படும். இதனால் தேவையில்லாமல் அதிகம் சாப்பிட்டு உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.மறுபுறம், நல்ல தூக்கம் கிடைத்தால் உடல் மாற்றுச்சத்து சரியாக வேலை செய்து கொழுப்பு எரிப்பு இயல்பாக நடக்கும். அதனால் எடை குறைக்கும் முயற்சியில் தூக்கம் ஒரு முக்கிய காரணியாகும்.

4.சரியான உணவுப் பழக்கம்

தினசரி உணவில் காய்கறிகள் (வெள்ளரிக்காய், கரட், முட்டைக்கோஸ்) சேர்ப்பது குறைந்த calories உடன் வயிறு நிறைந்த உணர்வை தரும். காலை உணவுக்கு ஓட்ஸ் மிகவும் நல்லது, இது நீண்ட நேரம் பசி வராமல் வைத்திருக்கும். அதேபோல், முளைகட்டிய பயறு மற்றும் பருப்பு வகைகள் உடலுக்கு தேவையான புரதத்தை வழங்கி வளர்சிதை மாற்றத்தை(metabolism ) மேம்படுத்தும்.பழங்கள் (அப்பிள், பப்பாளி, தர்பூசணி) இயற்கையான சத்துக்களை வழங்குகின்றன. முட்டை ஒரு சிறந்த புரதச் சத்து நிறைந்த உணவாகும், இது உடலை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், பச்சை தேநீர்(Green Tea) உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க உதவுகிறது. இரவு நேரத்தில் காய்கறி சூப் குடிப்பது குறைந்த கலோரியுடன் நிறைவான உணர்வைத் தரும். இவை அனைத்தும் சேர்ந்து உடல் எடை குறைப்பை இயற்கையாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற உதவுகின்றன.

மொத்தத்தில், உடல் எடை குறைப்பது கடுமையான உணவுக் கட்டுப்பாடு அல்ல. அது ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றமே. சரியான உணவு, போதுமான தண்ணீர், தினசரி உடற்பயிற்சி மற்றும் நல்ல தூக்கம் போன்ற சிறிய பழக்கங்களை தொடர்ந்து பின்பற்றினால் இயற்கையாக உடல் எடை குறையலாம். நல்ல பழக்கங்களை உருவாக்கினால் உடல் எடையும் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

expresstamil_health

You may also like

expresstamil_health
மருத்துவம்

இரவில் இந்த அறிகுறிகள் தென்படுகிறதா?

நமது உடலில் கல்லீரல் மிக முக்கியமான மற்றும் பெரிய உறுப்பாகும். இது அடிவயிற்றின் மேல் வலதுபுறத்தில், உதரவிதானத்திற்கு கீழே மற்றும் இரைப்பைக்கு மேலே அமைந்துள்ளது.  செரிமானத்திற்கு தேவையான
தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.