தகவல்கள் தொழில்நுட்பம்

மிக மெல்லிய Wallpaper TV-யை அறிமுகப்படுத்திய LG

LG உலகின் மிக மெல்லிய Wallpaper TV-யை CES 2026-ல் அறிமுகப்படுத்தியுள்ளது.லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறவுள்ள CES 2026 கண்காட்சியில், LG Electronics தனது புதிய OLED evo W6 True Wireless Wallpaper TV-யை வெளியிட்டுள்ளது.

9 மில்லிமீற்றர் தடிமன் மட்டுமே கொண்ட இந்த TV, சுவரில் ஓவியம் போல பொருத்தக்கூடிய வடிவமைப்புடன் வருகிறது.

True Wireless தொழில்நுட்பம் மூலம், அனைத்து இணைப்புகளும் Zero Connect Box-ல் இருக்கும். இதை TVயிலிருந்து 10 மீட்டர் தூரத்தில் வைக்கலாம்.இதிலிருக்கும் Hyper Radiant Color Technology கருப்பு, நிறம், பிரகாசம் ஆகியவற்றை அதிகரித்து, பிரதிபலிப்பை குறைக்கும்.Brightness Booster Ultra மூலம், சாதாரண OLED-களை விட 3.9 மடங்கு அதிக பிரகாசம் வழங்குகிறது.Reflection Free Premium Certification பெற்ற முதல் LG TV இதுவாகும்.

கேமிங் & AI அம்சங்கள்

இந்த TVயில் 4K 165Hz refresh rate, NVIDIA G-SYNC மற்றும் AMD FreeSync Premium ஆதரவு உண்டு.

0.1ms response time மற்றும் Auto Low Latency Mode (ALLM) மூலம் கேமர்களுக்கு சிறந்த அனுபவம் கிடைக்கும்.

5.6 மடங்கு சக்திவாய்ந்த NPU-உடன் α (Alpha) 11 AI Processor Gen3 இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

Google Gemini மற்றும் Microsoft Copilot இணைப்பு மூலம், பயனர்கள் குரல் வழியாக கேள்வி கேட்டு தனிப்பயன் பதில்களை பெறலாம்.

You may also like

தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்