மருத்துவம்

மதிய உணவுக்குப் பிறகு ஏன் தூக்கம் வருகிறது?

மதிய உணவு சாப்பிட்ட பிறகு பலருக்கும் தூக்கம் வருவதைப் போன்ற உணர்வு ஏற்படும், சிலரோ தூங்கியே விடுவார்கள். இதற்கு என்ன காரணம்?

மதிய உணவுக்குப் பிறகு தூக்கம், மந்தம் மற்றும் பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு இருக்கும். இதனை ’உணவுக் கோமா’ என்று அழைப்பார்கள். இப்படி மதிய வேளையில் தூக்கம் வருவதற்கான காரணங்கள் என்னென்ன என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மதிய நேரத்தில் நாம் இலகுவான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவை உட்கொள்வதால் செரிமானத்திற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.

அதோடு செரிமான அமைப்பிற்கு, உணவை ஜீரணிக்க அதிக இரத்தம் தேவைப்படுகிறது. மதிய உணவுக்குப் பிறகு, மூளைக்கு இரத்த ஓட்டம் குறைகிறது. மதிய உணவுக்குப் பிறகு நாம் மந்தமாக இருக்கவும் தூக்கம் வரவும் இதுதான் காரணங்களாகும்.

உணவு உட்கொண்ட உடனேயே, செரிமான செயல்முறையால் இரத்த சர்க்கரை அளவில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்படுகிறது, இதனால் உண்ட மயக்கம் ஏற்படுகிறது.

மதிய நேரத்தில் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

காலை உணவைத் தவிர்த்துவிட்டு நேரடியாக மதிய உணவை உண்பவர்களுக்குதான் அதிக அளவில் இந்த உணர்வு ஏற்படும். அளவுக்கு அதிகமான உணவை உண்பதால் செரிமானம் ஆக நேரம் எடுக்கும். எனவே,மதிய உணவுக்குப் பிறகு உடலில் சோர்வு ஏற்படும்.

ஆகவே, காலை நேரத்தில் முழு தானியப் பொருட்கள், ஓட்ஸ், பிரவுன் ரொட்டி, முட்டை மற்றும் பழங்களை சாப்பிடுவது உடலில் சோர்வு ஏற்படுவதைத் தவிர்க்க உதவும்.

You may also like

expresstamil_health
மருத்துவம்

இரவில் இந்த அறிகுறிகள் தென்படுகிறதா?

நமது உடலில் கல்லீரல் மிக முக்கியமான மற்றும் பெரிய உறுப்பாகும். இது அடிவயிற்றின் மேல் வலதுபுறத்தில், உதரவிதானத்திற்கு கீழே மற்றும் இரைப்பைக்கு மேலே அமைந்துள்ளது.  செரிமானத்திற்கு தேவையான
மருத்துவம்

வழுக்கைத் தலையில் முடி வளரணுமா? 

முடி உதிர்தல் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இது வயது, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக ஏற்படலாம். பெரும்பாலான மக்கள்