செல்போன் பாவிக்கும் பலரும் சார்ஜ் (charge)சீக்கிரம் ஏறவில்லை என்று புலம்புவார்கள்.அதற்கு சார்ஜர் (charger) ஒரிஜினல்(original) ஆக இருக்க வேண்டும். அதன் இணைப்பு வயரும்(Charge cable) தரமானதாக இருக்க வேண்டும்.மேலும்,போனை ஓப்(Off) செய்து அல்லது பிளைட் மோடில்(Flight mode) வைத்து சார்ஜ் போட்டாலும் விரைவாக சார்ஜ் ஏறும்.
ஒரு அண்ட்ரோய்ட் போனில்(Android Phone) இரண்டு சிம்களை(Sim) பயன்படுத்தினால் சார்ஜ் சீக்கிரம் குறையலாம். காரணம், ஒரு சிம்முக்கு வலையமைப்பின் அலைவரிசை (Network Coverage) சரியாக கிடைக்கவில்லை என்றாலும் அது அதிக சக்தியை திரட்டி டவரை தேடும் அப்போது பேட்டரி குறையும்.எனவே,ஒரு சிம்மை பயன்படுத்துவதே சிறந்தது.
செயலிகளை (Apps) அதிகமாக பதிவிறக்கம்(Download) செய்து வைத்திருப்பதால் பேட்டரி சார்ஜ் (Battery charge) குறைய அதிக வாய்ப்புண்டு.அத்துடன்,போன் ஸ்லோவாகுவதற்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.அதேபோன்று,வட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வரும் அனைத்து வீடியோக்கள்-போட்டோக்களும் பெரும்பாலும் போனை ஸ்லோவாக்கும். அதனால் அடிக்கடி அவற்றை நாம் நீக்க (Delete) வேண்டும்.
போனை ஓப்(off) செய்யாமல் பயன்படுத்துவதும் தவறானது. நாம் தூங்காமல் 24 மணி நேரமும் சில வருடங்கள் இருந்தால் என்ன நிலைக்கு ஆளாகுவோமோ அதேபோன்று தான் போனும். அதனால் இரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு அது தானாகவே ஓஃப் ஆகும் வகையிலும் மற்றும் காலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு அது தானாகவே ஒன் ஆகும் வகையில் செட்டிங்(Setting) செய்து வைக்கலாம். இதன் மூலமாக பேட்டரியின் பாவனைக் காலம் அதிகரிக்கும்.
பலரும் நெட்வொர்க்குக்குகள் சரியாக கிடைக்கவில்லை என்று புலம்புகின்றனர். அதற்கு பல தீர்வுகள் இருக்கின்றன. சிம் கார்டில் உள்ள செட்டிங்குகளில் சில மாற்றங்களை செய்தால் நெட்வொர்க் மிக ஸ்பீடாக இருக்கும்.
அதேபோன்று, போன் அதிக அளவில் சூடாகாமல் இருப்பதற்கும் பல செட்டிங்குகள் இருக்கின்றன். அதை அறிந்து பயன்படுத்த வேண்டும். போனின் பக்கவாட்டில்(Side) இருக்கும் ஒன்- ஓப் சுவிச்சினை அதிக அளவில் பயன்படுத்தக் கூடாது. இதற்கென்று போனை இருமுறை டச் செய்தால் ஒன் ஆகுவதும் ஓப் ஆகுவதுமான செட்டிங் இருக்கின்றது அதை பயன்படுத்த வேண்டும்.
எப்போதுமே குறைவான வெளிச்சத்தில் தான் போனை பார்க்க வேண்டும். இது பேட்டரி குறைவதை அதிக அளவில் தடுக்கும்.நம் கண்களை பாதுகாக்கும். பில்டர்கள் தற்போது அனைத்து ஃபோன்களிலும் வந்துவிட்டது அதைப் பயன்படுத்த வேண்டும்.பேட்டரி சேவர் பட்டனை பயன்படுத்தினால் அதிக அளவில் பேட்டரி சேமிக்கப்படும்.
முறையாக பயன்படுத்தினால் விலை குறைவாக வாங்கப்பட்ட போனாக இருந்தாலும் ஐந்து ஆண்டுகள் வரை அது நிச்சயம் உழைக்கும்.

