மட்டக்களப்பு நகர்-பொற் தொழிலாளர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்று நீர் திடீரென நீல நிறமாக மாறியுள்ள சம்பவம் இன்று (11) இடம்பெற்றுள்ளதை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் தண்ணீர் தொட்டியை நிரப்புவதற்கு வழமைபோல இன்று காலையில் தண்ணீர் பம்பை இயக்கியவுடன் தண்ணீர் நீல நிறத்தில் வெளிவந்துள்ளது.இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தண்ணீர் பம்பை நிறுத்திவிட்டு வாளியில் தண்ணீரை எடுத்து சோதனை செய்தபோது, அது நீல நிறத்தில் மாறியுள்ளதை உறுதிப்படுத்திக் கொண்டு கிணற்றை எட்டிப் பார்த்த போது அதுவும் நீல நிறத்தில் இருப்பதைக் கண்டு அதிசயமடைந்தார்.
இது தொடர்பாக கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்துள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

